பிபின் ராவத்தின் கடைசி ஆசை: பார்க்காமலே மரணித்த சோகம்! இறுதி அஞ்சலி நேரலை
ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் கடைசி ஆசையையும், அதனை கடைசி வரை பார்க்காமல் சென்றதை நினைத்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தளபதி விபின் ராவத் உத்தரகாண்ட் மாநிலம் சாய்னா கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி மதுலிகா, சோஹாக்பூர் சமஸ்தானத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 1985ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மறைந்த பிபின் ராவத், தன்னுடைய கடைசி நாட்களை தனது சொந்த கிராமமான சாய்னா கிராமத்தில் கழிப்பதற்கே அதிகமாக ஆசைப்பட்டுள்ளர்.
மேலும் தான் பிறந்த கிராமத்தில் தனக்கு சொந்தமாக வீடு கட்ட நினைத்து, பல ஆண்டுகள் தள்ளிப்போன நிலையில், கடந்த வாரம் தன் பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

பின்பு வீடு கட்டும் வேலை தீவிரமாக நடைபெற்ற நிலையில், இவரது மரணத்தினால் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. பிபின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்ற போது ஒட்டுமொத்த கிராமமே பயங்கர கொண்டாட்டத்தில் மூழ்கினர். தற்போது இவரது மறைவு செய்தியை கேட்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தனது சொந்த கிராமத்தில் வீடு கட்டுவது மட்டுமின்றி, குறித்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த சலை அமைக்குமாறும் அரசிடம் கேரிக்கை வைத்தாக உறவினர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாட ஊருக்கு வருவதாக இருவரும் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர்களின் ஊர் வருகை இனி எக்காலத்திலும் நடக்காது என்று அப்போது தோன்றவே இல்லை என்று மனம் நொந்து பிபின் ராவின் மனைவியின் சகோதரர் கூறியுள்ளார்.
மேலும் பிபின் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட போது தண்ணீர் கேட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவர் கூறியுள்ளார்.