பிரபல காமெடி நடிகரின் மனைவி தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகினர்
மலையாள திரையுலகின் இளம் காமெடி நடிகரான உல்லாஸ் பந்தலம் மனைவி ஆயிஷா தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகர்
மலையாள திரையுலகில் இளம் காமெடி நடிகர்களில் ஒருவனான உல்லாஸ் பந்தலம். இவரது மனைவி ஆயிஷா(38) என்பவரைக் காணவில்லை என்று உல்லாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொலிசாரின் விசாரணையில் முதல் கட்டமாக தூக்கில் தொங்கியபடி சடலமாக ஆயிஷா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவரை தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா? அல்லது தானாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறித்த நடிகரிடம் விசாரணை மேற்கொண்ட போது இவர் வீட்டில் இருக்கும் போது தான், ஆயிஷா வீட்டின் முதல் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன்பு ஆயிஷா முதல்தளத்தில் தூங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மனைவியை மாடியில் கூட தேடி பார்க்காமல் காவல்நிலையத்தில் புகார் அளித்த குறித்த நடிகர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம் மம்முட்டி நடித்த ‘தெய்வத்தின் ஸ்வந்தம் கிளீடஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆயிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிசோதனை ரிப்போர்ட் வந்த பின்பே உண்மை தெரியவரும் என்று கூறப்படுகின்றது.