காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு தெரியுமா?
சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ள, பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி
தொழிலதிபர், டான்ஸர், காமெடி நடிகர் என பன்முகத் திறமையோடு விளங்கும் ரெடின் கிங்ஸ்லி, தனது 46 ஆவது வயதில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்துள்ளார். தற்போது இந்த விடயம் தான் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஒரு டான்சராக திரையுலகில் பணியாற்றிய ரெடின் கிங்ஸ்லி, பின்னர் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான பிஸ்னஸ் ஒன்றையும் செய்து வருகிறார்.
எனினும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்த நிலையில், இவரை இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.. தான் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி, 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். திரையுலகில் ஒரு டான்சராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், 1998 ஆம் ஆண்டு 'அவள் வருவாளா' படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பர்.
ஒரு பக்கம் தன்னுடைய டான்ஸை பேஷன் ஆக வைத்திருந்தாலும், மற்றொருபுறம் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் கோடி கணக்கில் இவர் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களில் நடித்தபோது சம்பாதித்ததை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில் மட்டும், இவர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்திலும் நடித்திருந்தார்.
படு பிஸியான நடிகராகவும், தொழிலதிபராகவும், வலம் வந்து கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி மிகவும் எளிமையான முறையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. 46 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ள ரெடின் கிங்ஸ்லி பற்றிய தகவல்களும் தற்போது இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |