கதறும் திரையுலகம்… வடிவேலுவுடன் நகைச்சுவையில் கலக்கிய பிரபல நடிகர் திடீர் மரணம் - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார்.
சின்னத்திரையில் மர்மதேசம் தொடருக்கு இவர் குரல் கொடுத்திருந்தார்.
மருதமலை திரைப்படத்தில் வடிவேலுவுடன் காளிதாஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை குணச்சித்திர நடிகர் மோகன் ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் குரலை இனிமேல் கேட்க முடியாது. நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், வில்லன்களுக்கு தனது குரல் மூலம் சக்தி கொடுத்தவர் இறந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார். வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திரும் தடம் பதித்த காளிதாஸ் உயிரிழந்துள்ளது.
சினிமாத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு சினிமா உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு போருரில் நாளை நடைபெற உள்ளது.