பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கிறாரா இந்த காமெடி நடிகர்? தீயாய் பரவும் தகவல்! உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 தொடர்பாக மூத்த நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. கடந்த நான்கு சீசன்க கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளர் மாற்றப்படவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு நடிகர் சிம்புவிடம் பேசி வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் மூத்த நடிகரான எம்எஸ் பாஸ்கரிடம் பிக்பாஸ் டீம் பேசி வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் ஒரு சீனியர் நடிகர்கள் சிலர் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் முதல் சீசனில் கஞ்சா கருப்பு, வையாபுரி ஆகியோர் பங்கேற்றனர். இரண்டாவது சீசனில் நடிகர் பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், தாடி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். மூன்றாவது சீசனில் இசைக் கலைஞர் மோகன் வைத்யா, நடிகர் சரவணன், இயக்குநர் சேரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பிக்பாஸ் நான்காவது சீசனில், சுரேஷ் சக்கரவர்த்தி, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். அந்த வகையில் சீசன் 5ல் மூத்த நடிகரான எம்எஸ் பாஸ்கரை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது விஜய் டிவி.