விரல்களை இழந்து! பிச்சை எடுக்கிறேன் - முதல்வர் விஜய் உதவி செய்யுங்கள்.. காமெடி நடிகர்
90-ஸ் களின் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான பாவா லட்சுமணன் தனது கால் விரல்களை இழந்து தற்போது இருக்க வீடு கூட இல்லாத நிலையில் அவர் முதல்வர் விஜய்யின் உதவியை நாடி பேசி இருப்பது வைரலாகி வருகின்றது.

பாவா லட்சுமணன்
'மாயி' படத்தில் வடிவேலுவுடன் மிகவும் நகைச்சுவையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்பாவா லட்சுமணன்.
90-ஸ் களின் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தார்.
சமீப காலமாக இவரை திரைப்படங்களில் பார்ப்பதே மிகவும் அரிதாக இருந்து.
இந்த நிலையில் தற்போது ஒரு விபத்து காரணமாக தனது காலில் 3 விரல்களை இழந்து வறுமையில் முதல்வரிடம் உதவி கேட்டு ஒரு பேட்டியில் பேசி உள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரலாகும் பேட்டி
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன்,
“நான் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருஷமா இருக்கேன். ஆரம்பத்துல புரொடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்தேன், அப்புறம் தான் நடிகனா மாறினேன்.
'மாயி' படம் எனக்குப் பெரிய அடையாளம் தந்தது. ஆனா சமீபகாலமா எனக்கு சினிமாவுல வாய்ப்பே இல்லை.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கர்நாடகாவுல ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்குப் போயிருந்தப்போ, எதிர்பாராத விதமா அங்கிருந்த ஜெனரேட்டர் மேல கால் வச்சுட்டேன். அப்போ எனக்கு வலி எதுவும் தெரியல.
ஆனா, 10 நாள் கழிச்சு கால் பயங்கரமா வீங்கிடுச்சு. ஆஸ்பத்திரியில காட்டியப்போ , இன்பெக்ஷன் ஆகி உடனே ஆபரேஷன் பண்ணி 3 விரல்களையும் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. வேற வழி இல்லாம விரல்களை எடுத்துட்டேன்.

விரல்களை எடுத்த பிறகு என்னால் இனி நடக்கவே முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பரவிய தவறான தகவல் பரவியதால் படவாய்ப்பு வரவே இல்லை.
இப்போ நான் பிச்சை எடுக்குற நிலைமையில தான் இருக்கேன்.
இந்த வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டாங்க, என நண்பர் தான் இப்போதைக்குத் தங்குறதுக்கு ஒரு வீடு பார்த்து கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்.
இந்த இக்கட்டான சூழல்ல விஜய் டிவி பாலா, நடிகர் ஜீவா, போன்றவர்கள் எனக்குத் தொடர்ந்து சாப்பாட்டுக்கும் மருத்துவச் செலவுக்கும் பண உதவி செஞ்சுட்டு இருக்காங்க.
எனக்கு இப்போ முதலமைச்சர் விஜய் அவர்கள் எனக்கு ஏதாச்சும் உதவி செய்தா நல்லா இருக்கும்.
அவரை நேர்ல போய்ப் பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன், ஆனா என்னால அவரைப் பார்க்க முடியல. இருப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுறேன்.
எனக்கு ஒரு வீடு கிடைச்சா, என் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பேன்” என மிக உருக்கமாக பேடசி உள்ளார். இதற்கு இணையவாசிகள் விஜய் உதவி செய்வாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பியதுடன் பாவா லட்சுமணனுக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |