இறுதிக்கட்ட பரபரப்பில் வெளியறிய முக்கிய போட்டியாளர்.. பைனலுக்கு சென்ற குத்வித் கோமாளி யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குக் வித் கோமாளி 2ம் சீசனின் செமி பைனலில் sea food சமைக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், நடந்த advantage டாஸ்கில் கனி ஜெயித்ததால் அவருக்கு இன்றைய செமி பைனல் போட்டியில் சில சலுகைகள் வழங்கப்பட்டது.
அதில், முக்கியமான ஒன்று அவர் என்ன சமைக்க வேண்டும் என்பதற்கான பொருளை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது தான். மேலும் மற்றவர்கள் என்ன சமைக்க போகிறார்கள் என்பதையும் அவர் தான் தீர்மானிப்பார் என கூறினார்கள். இதனால், கனி promfret மீனை சமைக்கப்போவதாக முதலில் தேர்ந்தெடுக்க.
அதன் பின் தன் கடும் போட்டியாளரான ஷகீலாவுக்கு squid கொடுத்தார். இந்த நிலையில், இந்த சுற்றின் முடிவில் இரண்டு பேர் நேரடியாக பைனலுக்கு முன்னேற உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. கனி தான் முதல் ஆளாக பைனலுக்கு முன்னேறினார். அதன் பின் அஸ்வின் இரண்டாவதாக பைனலுக்கு சென்றார்.
அதன் பின் பாபா பாஸ்கர் மற்றும் ஷகீலா இடையே எலிமினேஷனுக்கான போட்டி நடந்தது. அதில், பாபா பாஸ்கர் அசத்தி, மூன்றாவது ஆளாக பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. ஷகீலா எலிமினேட் ஆனார்.தான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் என கூறிய ஷகீலா, தனது இமேஜை மாற்றிய குக் வித் கோமாளிக்கு நன்றி கூறினார்.