கலர் கலர் சோப்பில் ஏன் நுரை மட்டும் வெள்ளையா வருகின்றது தெரியுமா?
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பன்படுத்தும் சில பொருட்களின் பௌதிக இயல்பை நாம் அறியாமலே இருக்கின்றோம்.
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல கொருட்களை உபயோகிக்கின்றோம். அந்த பொருட்களில் நாங்கள் அதிகமாக பயன்படுத்தும் சோப்பை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சோப்
சோப்பை நாம் தினமும் வெள்ளை, பச்சை, சிவப்பு, ஆரஞ்சு என எத்தனையோ வண்ணங்களில் வாங்கி பயன்படுத்துகின்றோம். இவை நமது உடலை சுத்தமாக வைத்து கொள்ளவும் அழுக்குகளில் இருந்து விலக்கவும் காணப்படுகின்றது.
என்னதான் வண்ணங்களில் சோப் இருந்தாலும் அதில் தண்ணீர் படும் சமயத்தில் மட்டும் ஏன் நுரை வெள்ளையாக வருகின்றது என்பதை யாராவது சிந்தித்துள்ளீர்களா?
இந்த வெள்ளை நுரை வருவதற்கான காரணம் சோப்பில் கிளீனிங் ஏஜெண்ட், கலர் கிடைப்பதற்கான டை, மனம் பெறுவதற்கான பெர்ஃபியூம் மற்றும் இதர பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சோப்புக்கு திட வடிவம் கொடுப்பதற்கும், சருமத்தில் பயன்படுத்தும்போது ஈரப்பதம் கொண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் சோப்பும் தண்ணீரும் சேரும் போது அதிலுள்ள ஆர்கானிக் செயின் மற்றும் ஐகானிக் ஹெட்ஸ் இணைந்து நுரையை உருவாக்கும்.
இதன் மூலம் சோப்பு துகள்கள் பிரிந்து நுரையாக வெளியேற்றப்படும். இதனால் தான் இதில் வெள்ளை நிற நுரை வருகின்றது.
நாம் பயன்படுத்தும் சோப்பில் சரும பராமரிப்பிற்கு உகந்த எண்ணெய் மற்றும் இதர பொருட்களை கொண்டு சோப் பயன்படுத்தப்படுகின்றன.