சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை சொல்லும் - எந்த நிறம் ஆபத்தானது?
உங்களுக்கு சிறுநீர் எந்த நிறத்தில் வருகிறதோ அந்த நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி சொல்ல முடியும்.

சிறுநீர் ஆரோக்கியம்
உங்கள் சிறுநீரின் நிறத்தை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.
உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது உள்ளே ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை உங்களின் சிறுநீர் காட்டிக்கொடுத்துவிடும்.
உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தெளிவான சிறுநீர்
உங்கள் சிறுநீர் மிகவும் தெளிவாக இருந்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக நீர் அருந்துகிறீர்கள், அதாவது உடலில் நீர்ச்சத்து அதிகரித்துள்ளது என்று அர்த்தம். இது சோடியம் மற்றும் தாதுக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
வெளிர் மஞ்சள் சிறுநீர்
- உங்கள் சிறுநீர் மிகவும் தெளிவாகவோ அல்லது மிகவும் கருமையாகவோ இல்லாமல், வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இயல்பான மற்றும் ஆரோக்கியமான சிறுநீரின் அறிகுறியாகும். இந்த நிறம், உடலில் இருந்து நச்சுகள் திறம்பட வெளியேற்றப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.

அடர் மஞ்சள் நிற சிறுநீர்
- உங்கள் சிறுநீர் அடர் நிறத்தில் இருந்தால், உங்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம். நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி அது.

சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற சிறுநீர்
- உங்கள் சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், அது சிறுநீரகக் கற்கள் அல்லது சிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |