வாயில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பெருங்குடல் புற்றுநோய் இருக்கு
Life Style
By Pavi
வாயில் ஏற்படும் மாற்றங்கள் பெருங்குடல் புற்றுநோயாக இருக்கலாம் எனப்படுகின்றது. அதை பதிவில் பார்க்கலாம்.

பெருங்குடல் புற்றுநோய்
பெருங்குடல், அல்லது பெரிய குடல் என்று சொல்வார்கள். இது மனித உடலில் செரிமான மண்டலத்தின் இறுதி பகுதியாகும்.
உடலின் இந்த பகுதியை பாதிக்கும் புற்றுநோய்பெருங்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்றன. இது தவிர பெரிய குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகின்றன.
பெருங்குடலின் எந்தப் பகுதியும் புற்று நோயினால் பாதிக்கப்படலாம். இந்த பெருங்குடல் புற்றுநோய் உங்களுக்கு வந்துவிட்டால் அது முன்கூட்டியே சில அறிகுறிகளை காட்டும்.
அப்படி அறிகுறிகளை காட்டும் போது நீங்கள் புறக்கணிக்காமல் சிகிச்சை பெற்றுக்கொள்வது நன்மை தரும். அந்த அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.

ஈறுகளில் இரத்தக் கசிவு
- ஈறுகளில் இரத்தக் கசிவு இது ஒரு பொதுவான அறிகுறியாகும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து செரிமானப் பாதையை அடைகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியின்படி, ஈறுகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து 17 முதல் 21 சதவீதம் வரை உள்ளது. இரத்தக் கசிவு இல்லாமல், ஈறுகள் வீங்கியோ அல்லது மென்மையாகவோ இருப்பது, இந்த புற்றுநொய்க்கான அறிகுறியாக தான் பார்க்கப்படுகன்றது.
வாய் துர்நாற்றம்
- வழமைக்கு மீறி தொடர்ச்சியான வாய் துர்நாற்றமும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் எனப்படும் ஒரு பாக்டீரியாவால் ஏற்படும். இந்த பாக்டீரியா ஈறு நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க் கட்டிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உமிழ்நீர் அல்லது இரத்த அணுக்கள் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்.

நாக்கில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பூச்சு
- நாக்கில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பூச்சு ஏற்படுவதற்கு பாக்டீரியா, அழுக்கு அல்லது இறந்த செல்கள் படிவதே காரணமாகும். இது மோசமான வாய் சுகாதாரம், நீர்ச்சத்து குறைபாடு அல்லது வாய் வறட்சி ஆகியவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆய்வின் படி சில நேரங்களில் இது பெருங்குடல் புற்றுநோயாக இருக்கலாம் எனப்படுகின்றது.
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பற்களை இழத்தல்
- நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பற்களை இழந்தவர்களுக்கு, பெருங்குடல் புற்றுநோய் உருவாகுவதற்கு அபாயம் 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இது நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாத ஈறு நோயின் விளைவாகவும் இருக்கலாம். இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US