தனது திருமணத்தி்ற்கு வராமல் இருந்த சக ஊழியர்கள்! சீன பெண் எடுத்த அதிரடி முடிவு
பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு சக ஊழியர்கள் யாரும் வராததால் மறுநாளே வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பெண்
பொதுவாக ஒரு அலுவலகத்தில் ஊழியர் தனது வேலையை ராஜினாமா செய்கிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு, மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடு, சம்பளம் பற்றாக்குறை உள்பட பல காரணங்கள் இருக்கும்.
சீனாவை சேர்ந்த ஒரு பெண் தனது திருமணத்திற்காக தனது சக ஊழியர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அவர் ஏற்கனவே சக ஊழியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஒருசிலரை மட்டும் திருமணத்திற்கு அழைத்தால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் அதன் காரணமாக அவர் அனைத்து 70 சக ஊழியர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
திருமணத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது மட்டுமன்றி அவ்வப்போது அனைவரும் திருமணத்திற்கு வர வேண்டும் என்றும் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீர் ராஜினாமா செய்த சோகம்
ஆனால் திருமண நாளின்போது அவர் தனது சக ஊழியர்களில் ஒரே ஒருவர் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்ததை கவனித்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்ததோடு, மற்ற ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கருதியுள்ளார்.
திருமணத்திற்கு வந்த ஒரே ஒரு ஊழியரும் தனது வழிகாட்டி என்றும் வேறு வழியின்றி அவர் வந்ததையும் குறித்த பெண் தெரிந்து கொண்டதையடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
அதாவது தனது அலுவலகத்திலிருந்து பாதி்க்கும் மேற்பட்டோர் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவார்கள் என்று அனைவருக்கும் உணவ ஆயத்தப்படுத்தியுள்ளார்.
ஆனால் தற்போது திருமணத்திற்கு ஊழியர்கள் வராததால் உணவுகள் வீணாகிவிட்டதாகவும், தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார.
சக ஊழியர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்ற காரணத்திற்காக ஒரு பெண் தன் வேலையை ராஜினாமா செய்திருப்பது பெரும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்த செய்தியை படிக்கும் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.