இலங்கையில் இருக்கும் கண்கவர் இடங்கள்.. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் உண்டா?
பொதுவாக இலங்கை போன்ற நாடுகள் இயற்கை அழகினால் நிரம்பியிருக்கும்.
இதன் காரணமாக தான் இங்கு ஒரு வருடத்திற்கு அளவிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் இயற்கையுடன் கூடிய ஒரு பயணம் வேண்டும் என்றால் எந்தவிதமான தயக்கமும் இன்றி இலங்கையை தெரிவு செய்யலாம்.
இலங்கையில் இருக்கும் சில இடங்கள் மனித தலையீடு இல்லாமல் கவர்ச்சியாக இருக்கும்.
அந்த வகையில் வனப்பு மிக்க இலங்கையில் நாம் நினைத்து பார்க்க முடியாத அழகு கொண்ட சில இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கண்கவர் இடங்கள்
1. நுவரெலியா
இலங்கையில் இருக்கும் குளிரான பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இங்கு தேனிலவு, குடும்ப பயணங்கள், கல்வி சுற்றுலாக்கள் அதிகமாக வருவார்கள்.
அத்துடன் கிரிகோரி ஏரி, விக்டோரியா பார்க், பழைய தபால் அலுவலகம், மூன் பிளாசா, செயின்ட் கிளெய்ர் நீர்வீழ்ச்சி, ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் அம்பேவெல பண்ணை என ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.
2. எல்ல
இந்த இடமும் பார்ப்பதற்கு நுவரெலியா போல் தான் இருக்கும். நுவரெலியாவை விட இங்கு குளிர் சற்று குறைவாக இருக்கும்.
அத்துடன் பல்லென்கெட்டு நீர்வீழ்ச்சி, நைன் ஆர்ச் என்ற வளைந்த பாலம், ஜெட் வடிவ ரயில் பாதை ஆகிய இடங்கள் இருக்கின்றன. பார்ப்பதற்கு குட்டி நகரம் போல் இருந்தாலும் சுற்றுலா பயணிகளுக்கான அத்தனை வசதிகளும் இங்கு இருக்கின்றன.
3. தெணியாய
குளிர்ந்த காலநிலையில் தெணியாய “லிட்டில் நுவரெலியா” என அழைக்கப்படுகிறது. இந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கு செல்ல வேண்டும் என்றால் மாத்தளையிலிருந்து சரியாக 2 மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |