மழைக்காலங்களில் நோய் வந்துவிடுமென்று பயமா இருக்கா? கவலை வேண்டாம்... இதோ டிப்ஸ்
மழை காலம் வந்துவிட்டாலே கொசு தொல்லை அதிகமாகிவிடும். இதனால், சிலருக்கு டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, டைபாஃய்ட் என வரிசை கட்டி வரும் வைரஸ் காய்ச்சல்கள் படையெடுத்து தாக்கிவிடும்.
மேலும் சிலருக்கோ மழைக்காலங்களில் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் என வந்துவிடும்.
கவலை வேண்டாம்... மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்கள் பார்ப்போம் -
தண்ணீர்
மழைக்காலங்களில் நாம் எந்த இடத்திற்கு சென்றாலும், முதலில் சுத்தமான தண்ணீர் பருக வேண்டும். கண்ட இடத்தில் கிடக்கும் குழாய்களின் தண்ணீரையோ அல்லது சுகாதாரமற்ற பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரையோ பருகக் கூடாது.
எப்போதும், சுத்தமான தண்ணீர் பாட்டில்களை நம் கைகளில் வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல் வெளியூர் சென்றால் தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்.
ஜங்க் உணவுகளை தவிர்த்தல்
மழைக்காலங்களில் நாம் எங்கு சென்றாலும் தெருவோரத்தில் விற்கக்கூடிய ஜங்க் உணவுகளை சாப்பிட கூடாது. அப்படி ஜங்க் உணவுகளை சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும்.
மழைக்காலத்தில் பயணம் செய்யும்போது, பச்சையாகவோ, பாதி வெந்த உணவுகளையோ சாப்பிடாதீர்கள்.
குளித்தல்
எப்போதும் மழைக்காலங்களில் நாம் குளிக்கும்போது தண்ணீரில் கிருமிநாசினியை சிறிது கலந்து குளித்தால் நல்லது.
ஒருவேளை வெளியூருக்கு செல்லும்போது ஓட்டல்களில் தங்க நேர்ந்தால், பாத்டப்களை பயன்படுத்தாதீர்கள். அவை சுத்தமாக இருக்கிறதா என்று பாருங்கள். முடிந்த அளவு ஷவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
உறக்கம்
மழைக்காலங்களில் வெளியூர் செல்லும்போது தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 7 முதல் 9 மணிக்குள் உறங்கச் செல்லுங்கள்.
நோயாளிகளிடமிருந்து உங்கள் பக்கத்தில் யாராவது இருமினால், தும்மினால் விலகியிருங்கள். இல்லையென்றால், உடனே தொற்று பரவிடும்.
மழைக்காலங்களில் பயணம் செய்யும்போது சின்ன மெடிக்கல் கிட் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் வழக்கமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வீர்கள் என்றால் அந்த மாத்திரைகளையும் உடன் எடுத்துச்செல்லுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |