இருமல், நெஞ்சு சளியை ஓட ஓட விரட்டும் கஷாயம்: இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும்
பொதுவாக குளிர்காலத்தில் ஏற்படும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
இதனை தடுக்கும் விதமாக பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் விடுவதற்கு கூட பயம் கொள்வார்கள். ஏனெனின் இவர்களுக்கு தொற்றுகள் இலகுவாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
அந்த வகையில் குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் பிரச்சினையை வீட்டிலுள்ள மசாலா பொருட்களை கொண்டு சரிச் செய்து விடலாம்.
கஷாயம், உணவில் சேர்த்து சாப்பிடுதல், ரசம், காரக்குழம்பு இப்படியான உணவுகளை செய்து அடிக்கடி சாப்பிடலாம். இது தொற்றுக்களை குறைத்து உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
இதன்படி, சளி, இருமலை விரட்டியடிக்கும் உணவு பொருட்கள் என்னென்ன என்பதனை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி - ஒரு துண்டு
- துளசி- அரை கைப்பிடி
- தேன் - 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சியை நன்கு இடித்து அதன் சாறை எடுத்துக்கொள்ளவும்.
அதே போல் துளசியையும் நன்கு இடித்து அதன் சாற்றை பிழிந்து தனியாக எடுத்து கொள்ளவும்.
பிழிவதற்கு காட்டன் துணியை பயன்படுத்துவது சிறந்தது.
இரண்டு சாற்றையும் ஒன்றாக கலந்து தேன் கலந்து அப்படியே கரைத்தப்படி குடித்து விடுங்கள்.
முக்கிய குறிப்பு
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப தகுந்த அளவுகளில் கொடுக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |