ரஷ்யாவை எதிர்க்க உக்ரைன் இராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் - கதறும் பெற்றோர்கள்;
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் கோவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சைனிநிகேஷ் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த சைனி நிகேஷ் எனும் இளைஞர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 வயதே ஆன சைனி நிகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கோ நேஷனல் எரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகிறார்.
சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற அதிக ஆர்வத்துடன் இருந்த சைனி நிகேஷ் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
தற்போது, உக்ரைன், ரஷ்யா இடையே போர் தொடங்கியதால் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து, சைனி நிகேஷின் பெற்றோர்களிடம் பேசுகையில், 12-ம் வகுப்பு முடித்த உடன் இந்திய ராணுவத்தில் சேர ஆர்வமாக இருந்ததாகவும். ஆனால், இவரது உயரம் காரணமாக ரிஜக்ட் செய்யப்பட்டதாகவும், மேலும் சைனி நிகேஷ் அமெரிக்க ராணுவத்தில் சேர்வதற்கும் முயற்சிகள் எடுத்து தோல்வியுற்றிருந்தார் என பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர்.
2018-ல் உக்ரைனின் கார்க்கிவ்ல் இருக்கும் நேஷனல் ஏரோ ஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கல்வி பயில சென்றிருக்கிறார் சைனி நிகேஷ். அவரின் முடிவை மாற்றிக்ககோரி உடனடியாக வீட்டுக்கு வர அழைத்துள்ளனர். ஆனால், சாய் நிகேஷ் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
21yr student Sainikesh frm Tamil Nadu has joined #UkrainianArmy paramilitary forces to fight #RussianUkrainianWar. Sainikesh went to #Ukraine️ to study at National Aerospace Univ in #Kharkiv. He was to complete course by July. He had applied to join Indian Army but was rejected. pic.twitter.com/ehoVa6rpMx
— Sagay Raj P || ಸಗಾಯ್ ರಾಜ್ ಪಿ (@sagayrajp) March 8, 2022