காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல்
பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ' காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம்.
இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான்.
காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.
இத்தனை பெருமை மிகுந்த காபி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பது நம்மில் பலரும் அறியாத விடயமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் காபி தயாரி க்கப்படும் முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காபி உருவாக்கப்படும் விதம்
காபி பீன்ஸ் பழங்களில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? காபி பீன்ஸ் உண்மையில் காபி மரத்தின் சிவப்பு அல்லது மஞ்சள் பழங்களாக நிறத்தில் சிறிய பழங்களாக காணப்படும் அதன் விதைகளில் இருந்தே காபி தயாரிக்கப்படுகின்றது.
இந்த பழங்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு பின்னர் பதப்படுத்தப்பட்டு, நமக்கு வறுத்த மற்றும் வேக வைத்த காபி பீன்ஸ் உருவாக்கப்படுகின்றது.
காபி ஒரு பிரபலமான பானமாக இருப்பதைத் தவிர, பல்வேறு உணவுகளின் சுவையையும் மேம்படுத்தும்.
காபி இறைச்சிகளை மரைனேட் செய்வதற்கும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு ஆழம் சேர்ப்பதற்கும் சமையல்காரர்களிடையே பிரபலமாக ஒரு பொருளாக காணப்படுகின்றது.
எல்லா வகை காபியும் ஒரே மாதிரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அராபிகா மற்றும் ரோபஸ்டா ஆகிய இரண்டும் பொதுவாக வளர்க்கப்படும் மற்றும் உட்கொள்ளும் காபி வகைகளாக காணப்படுகின்றது.
அராபிகா அதன் லேசான மற்றும் நுட்பமான சுவைக்காக பிரபலமானது, அதே நேரத்தில் ரோபஸ்டா அதன் உள்ளடக்கத்தினால் உலகளவில் அதிகமாக நுகரப்பபடுகின்றது.
காபி தயாரிக்கப்படும் விதம் இதன் தரம் என்பவற்றை பொருத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் கேள்வி மிகுந்த ஒரு பொருளாக காபி காணப்படுகின்றது.
காபி குடிப்பதற்கு மட்டுமல்லாமல் அழகுசாதனப் பொருட்களிலும் இது ஒரு பிரபலமான பொருளாகும். ஏனெனின் காபியில் உள்ள காஃபின், சருமத்தை பொலிவாக்குவதற்கும் உடலுக்கு புத்துணர்வு வழங்குவதிலும் சிறந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |