குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இளநீர் ஜெல்லி... சுலபமா தயார் செய்வது எப்படி?
குழந்தைகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்களை மட்டும் வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். அந்தளவிற்கு உணவை விட தின்பண்டத்தையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு இவர்கள் சாப்பிடும் தின்பண்டங்கள் ஆரோக்கியமானதா என்பதை பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும். ஆனால் பெற்றோர்கள் பல தருணங்களில் கடைகளில் தான் வாங்கி கொடுத்து வருகின்றனர்.
ஈஸியான முறையில் வீட்டில் செய்யும் ஸ்நாக்ஸ் வகைகளில் இளநீர் ஜெல்லி எவ்வாறு செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கடல்பாசி - 10 கிராம்
இளநீர் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 100 கிராம்
செய்முறை
கடல் பாசியை பாத்திரம் ஒன்றில் தண்ணீர் எடுத்து அதில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் 250 கிராம் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த கடல் காசி, உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இளநீரை சேர்க்கவும். அதில் இருக்கும் வழுக்கையான தேங்காய்களை நீட்ட நீட்டமாக வெட்டி சேர்த்து நன்கு கிளறிய பின்பு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
ஆறிய பின்பு ஜெல்லி பதத்தில் இருக்கையில் இளநீர் ஜெல்லியை சதுரம் சதுரமாக வெட்டி எடுத்து பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |