தேங்காய் ஓடு இருந்தா வீசாதீங்க - பாம்பிற்கு இது ஆகாதாம்
வீட்டில் பாம்பு தொல்லை அடிக்கடி இருந்தால் அதற்கு தேங்காய் ஓடு அதாவது சிரட்டை மிகவும் உதவி புரியும் பொருளாக இருக்கும்.
தேங்காய் ஓடு
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் பாம்புகள் மனிதர்களின் வாழ்விடத்திற்குள் நுழையும். பெரும்பாலும் இந்த அபாயம் கிராமங்கள் மற்றும் வயல்களிலேயே நடக்கும்.
ஆனால் தற்போது நகரத்தில் வாழும் மக்களின் இடத்திற்குள்ளும் இந்த பாம்புகள் நுழைய ஆரம்பித்துள்ளன. இந்த பாம்புகளை விரட்ட பல மக்களுக்கு என்ன வழி என்பது தெரிவதில்லை.
அப்படி பாம்புகளை விரட்ட என்ன வழி எனும் கேள்விக்கு தீர்வாக தேங்காய் ஓடு இருக்கின்றது. தேங்காய் ஓட்டை பாம்பை விரட்ட எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

தேங்காய் ஓடு
இதை உங்கள் கதவின் கதவுச் சட்டகத்தில் வைக்கலாம், அல்லது பாம்புகள் வரக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் இடத்திலிலோ அல்லது தோட்டத்திற்கு அருகில், வாயிலின் மூலையில், பின்புற கதவு அல்லது வராண்டாவின் மூலையில் என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
தேங்காய் ஓடு வைத்தால் பாம்பு வருவது எவ்வாறு தடுக்கப்படும் என யோசிக்கிறீர்களா? தேங்காய் ஒடுக்கு ஒரு சிறப்பு வகையான வாசனை உண்டு, அது பாம்புகளுக்கு பிடிக்காத வாசனை ஆகும்.
மனிதர்கள் இந்த வாசனையை அதிகம் உணர மாட்டார்கள், ஆனால் பாம்புகளுக்கு மிகவும் வலுவான வாசனை உணர்வு இருக்கும். இந்த வாசனையை முகர்ந்தவுடன், வாசனை வரும் திசையில் செல்வதை பாம்புகள் நிறுத்திவிடுகின்றன.

எப்படி பயன்படுத்துவது?
1. முதலில் ஒரு உலர்ந்த தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதன் மேல் பகுதி தோலை முழுமையாக அகற்றவும்.
3. இப்போது உள்ளே இருக்கும் தேங்காயினை 3-4 பகுதிகளாக வெட்டவும்.
4. இப்போது இந்த தேங்காய் நீங்கிய சிரட்டையை உங்கள் கதவின் இரு மூலைகளிலும், தோட்டப் பாதையிலும், ஜன்னல் அருகே அல்லது உங்களுக்குத் தேவையான இடங்களில் வைக்கவும்.
5. அவற்றின் வாசனை இருக்கும் வகையில் ஒவ்வொரு 7-10 நாட்களுக்கு ஒருமுறை அவற்றை மாற்றிக்கொண்டே இருங்கள்.

இது உணமையிலேயே வேலை செய்கிறதா?
பாம்பை விரட்ட இந்த சிரட்டை முறை தீர்வு பல தலைமுறைகளாக, குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் எந்த ரசாயனங்கள் அல்லது பொருட்கள் இல்லாமல் தங்கள் வீடுகளை பாம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்கு இந்த சிரட்டை டிக்கை கையாள்கின்றனர்.
மேலும் இந்த ட்ரிக் அவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இப்போது நம் வீடுகளில் அதிகமான மரங்கள், செடிகள், தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகள் இருப்பதால், இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |