தேனை சூடுபடுத்துவது 'விஷமாக' மாறுமா? மருத்துவ விளக்கம்
சிலர் தேனை சூடுபடுத்தி சாப்பிடுவார்கள் இப்படி தேனை சூடுபடுத்தி சாப்பிடுவதால் அது உடலுக்கு ஊட்டச்சத்துகளை கொடுக்குமா என்பதை தலைமை உணவியல் நிபுணர் சோனிகா சவுத்ரி விளக்கியுள்ளார்.
தேன்
தேன் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதாலும் உடலுக்கு நன்மை பயக்கிறது.
மேலும், இது உடனடி ஆற்றலை உடலுக்கு அளிக்கும் தன்மை கொண்டது.
தேனை அப்படியே சாப்பிடுவது நல்லது இல்லையேல் தேனை லேசாக சூடாக்கி அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் அது முற்றிலும் பாதுகாப்பானது என்று உணவியல் நிபுணர் கூறுகிறார்.

ஆனால் தேனை அதிகமாக சூடாக்குவது அதன் இயற்கையான பண்புகளை இழக்கச் செய்யும் இதன் மூலம் உங்களுக்கு நன்மைகளைத் தரும் பண்புகளையே தேன் இழந்து விடும்.
தேனை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கும்போது, அதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் அழிக்கப்படுகின்றன. இப்படி அதிகமாக சூடாக்கப்பட்ட தேனை சாப்பிட்டாலும், அதன் எந்த நன்மைகளையும் நாம் பெற மாட்டோம்.

தேனை லேசாக சூடுபடுத்துவது நச்சுத்தன்மையை ஏற்படுத்தாது. லேசாக சூடுபடுத்தப்பட்ட தேன் உடலில் நச்சு விளைவை ஏற்படுத்துகிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால் தேனை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது, அது 5-HMF அல்லது 5-ஹைட்ராக்ஸி-மெத்தில்-ஃபர்ஃபுரல் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உருவாக்கும்.
இந்த வேதிப்பொருள் உடலின் டிஎன்ஏவை சேதப்படுத்தும், மேலும் புற்றுநோயை கூட ஏற்படுத்தக்கூடும். லேசாக சூடான தேனில் இந்த விளைவு வராது.

எனவே இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. தேனை அதன் இயற்கையான வடிவத்தில் சாப்பிடுவது சிறந்தது என்று கருதப்படுகிறது.
ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 1 முதல் 2 டீஸ்பூன் தேன் உட்கொள்ளலாம். ஒரு சிறு குழந்தைக்கு தேன் ஊட்டினால், அதன் அளவை அரை டீஸ்பூன் அளவை விட குறைப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனை இல்லாமல் தேன் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். போன்ற விடயங்கள் தலைமை உணவியல் நிபுணர் சோனிகா சவுத்ரியால் கூறப்படுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |