விமான பயணத்தில் தேங்காய் கொண்டு செல்லக்கூடாது ஏன் தெரியுமா?
விமானப் பயணத்தின் போது தேங்காய் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறுவதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.
விமான பயணம்
பொதுவாக விமான பயணம் மேற்கொள்ளும் போது சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று சில விதிகள் உள்ளது.
இவற்றினை நாம் கடைபிடிக்காவிட்டால், விமான நிலையத்திற்கு சென்ற பின்பு மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும்.
விமானத்தில் ஏறும் போது சில பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதற்கு பல காரணங்களும் இருக்கின்றது.
கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இது தவிர, தேங்காய் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேங்காய் ஏன் எடுத்துச் செல்லக்கூடாது?
தென்னிந்திய சமையல், திண்பண்டம் இவற்றிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தேங்காயை விமானத்தில் கொண்டு செல்வதற்கு அனுமது கிடையாதாம்.
ஏனெனில், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |