உலகிலே கரப்பான் பூச்சிகள் வாழ முடியாக இடங்கள் எவை தெரியுமா? இது தெரியாம போச்சே
வீடுகளில் அதிகமாக தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சிக்கும் வாழ முடியாத இடங்கள் உள்ளன. அதை பதிவில் பார்க்கலாம்.
கரப்பான் பூச்சிகள் வாழ முடியாக இடங்கள்
கரப்பான் பூச்சிகள் எல்லா இடங்களிலும் அறியப்பட்ட ஒரு பூச்சியாகும். இவை கிட்டத்தட்ட அனைத்துக் கண்டங்களிலும், காலநிலைகளிலும் வாழக்கூடியவை.
இந்த நிலையில் நமக்கு தெரிந்ததன் படி கரப்பான் பூச்சிகள் எல்லா இடத்திலும் இருக்கு என்று தான் தெரியும். ஆனால் இந்த கரப்பான் பூச்சிகள் கூட வாழ முடியாத இடங்கள் உண்டு.

அந்த வகையில் பூமியில் கரப்பான் பூச்சிகள் நிரந்தரமாக வாழ முடியாத முக்கிய இடமாக அண்டார்டிகா மற்றும் மிகவும் குளிர்ந்த ஆர்க்டிக் பகுதிகள் என்று கருதப்படகின்றது.
இதற்கு காரணம் கரப்பான் பூச்சிகள் பொதுவாக உறைபனி வெப்பநிலையை நீண்ட காலத்திற்குத் தாங்காது. இங்குள்ள மனிதக் குடியிருப்புகள், ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வெப்பமூட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் இந்த பூச்சிகள் உயிர் தப்பி பழைக்குமே தவிர அங்கு வாழ முடியாது.
இந்த நாடுகளில் சாதாரணமாக நம் நாடுகளை போல இயற்கையாக கரப்பான் பூச்சிகளால் வாழ முடியாது என மூறப்படுகின்றது. ஆனால் இன்னும் சில இடங்களில் கரப்பான் பூச்சிகள் இல்லை என கூறப்படுகின்றது.

அந்த வகையில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, மனித நடமாட்டம் இல்லாத அல்லது சமீபத்தில் தான் வளர்ச்சியடைந்த சில தீவுகளில் இவை இன்னும் இனப்பெருக்கம் அடையாமல் இருக்கின்றது என கூறப்படுகின்றது.
அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. ஏனெனில் இவை எளிதில் கப்பல்கள் மூலம் மூலம் உலகின் பல பகுதிகளுக்குப் பரவி வருகின்றது என கூறப்படுகின்றது.
ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பிய Foton-M3 செயற்கைக்கோளில் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டன.

இவை விண்வெளியில் இருந்தபோது இனப்பெருக்கம் செய்தன, மேலும் பூமிக்குத் திரும்பிய கரப்பான் பூச்சிகளில் சில, விண்வெளியில் கருவுற்றன என்று அறியப்பட்டது.
இப்படி விண்வெளியில் கூட கரப்பான் பூச்சிகள் இகப்பெருக்கம் செய்து வாழ்கை நடத்துகின்றன. ஆனால் குளிரான பிரதேசங்களில் கரப்பான் பூச்சிகளால் வாழ முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |