கரப்பான் பூச்சியை காலால் மிதிப்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க
கரப்பான் பூச்சியை பார்த்தாலே அருவருப்பு படும் நம்மில் சிலர் அதனை மிதித்து கொல்லவும் செய்வார்கள். அவ்வாறு செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பல இடங்களில் அசால்ட்டாக உலாவரும் கரப்பான் பூச்சியை, நாம் அவதானித்தால் உடனே முகத்தை தான் சுழிப்போம்.
சில வீடுகளில் பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கும் அறையில், கால் மிதிக்கும் இடமெல்லாம் கரப்பான் பூச்சியாகவே இருக்கும்.
ஆனால் இவ்வாறான கரப்பான் பூச்சியை காலால் நசுக்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கரப்பான்பூச்சியை காலால் நசுக்காதீங்க
கரப்பான் பூச்சியை காலால் நசுக்கினால் பக்கவிளைவுகள் ஏற்படுமாம். அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறும் என்றும், இவற்றினை சுவாசிக்கும் போது ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஏற்படலாம்.
செத்துப்போன கரப்பான் பூச்சியில் இருந்து சால்மோனெல்லா, ஸ்ட்ரெப்டோகாக்கி மற்றும் ஸ்டேஃபிளோகோகி போன்ற பாக்டீரியாக்கள் வெளியேறுகிறது. இவை மனித உடம்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றது. அதிலும் குடலில் பாதிப்பை ஏற்படுத்தி காலரா, டைபாய்டு போன்ற பிரச்சினை ஏற்படுத்துகின்றது.
ஒரு கரப்பான் பூச்ச தனது எடையை விட 900 மடங்கு அதிகமான எடையைக் கூட சுமக்கும் வல்லமை கொண்டதாம்.
சூழ்நிலைக்கு தக்கவாறு பொருந்தக்கூடிய தன்மை இவற்றுக்கு இருப்பதால், இதன் உயிர்வாழ்வு விகிதமானது அதிகமாகவே உள்ளது.
ஆகவே இனிமேல் கண்ணில் படும் கரப்பான் பூச்சியை அழிப்பதற்கு கடைகளில் விற்கப்படும் பூச்சி கொல்லி மற்றும் ரசாயன மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
எக்காரணத்தைக் கொண்டும் காலால் மதித்து நசுக்க வேண்டாம். இது உங்களது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |