நாவுக்கு ஏற்ற புதிய சுவை coca cola சிக்கன்: கேள்விப்பட்டதுண்டா? வீட்டில் செய்து பாருங்கள்!
பொதுவாகவே வீடுகளில் இருக்கும் உணவின் சுவை ஹோட்டல்களில் இருப்பதில்லை.
அதிலும் சிக்கன் சாப்பாடு என்றால் வீடுகளில் இன்னும் ஸ்பெஷலாக செய்யதான் விரும்புவார்கள். நீங்கள் பல்வேறு சிக்கன் ரெசிபி சாப்பிட்டு இருப்பீர்கள்.
செட்டிநாடு சிக்கன், கேப்சிகம் சிக்கன், சில்லி சிக்கன் ,தந்தூரி சிக்கன், பெப்பர் சிக்கன் என பல வகையில் சாப்பிட்டு இருப்பீர்கள்.
ஆனால் கோக கோலா சிக்கன் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள். இன்று நீங்க ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம்
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
பெரிய பூண்டு - 6 பற்கள்
வெங்காயத்தாள் - சிறிதளவு
இஞ்சி துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
கோக கோலா - 200 மில்லி லிட்டர்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சுத்தம் செய்த சிக்கனை உப்பு, மிளகுத்தூள்,சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிக்கன் வேக ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் சிறிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது கோக கோலாவை 200 மில்லி லிட்டர் ஊற்றுங்கள். கோக கோலாவின் ஃப்ளேவர் முழுவதும் சிக்கனில் இறங்கும் வரை நன்றாக வதக்கவும்.
கடைசியாக சிறிதளவு வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி சிக்கன் மேல் தூவி விடுங்கள்.
இப்போது டார்க் பிரவுன் நிறத்தில் ஜூசியான, சாஃப்ட் கோக கோலா சிக்கன் ரெடி.