வாயில் எலியுடன் சுடசுட ஓடிய நாகபாம்பு! நகைச்சுவை தருணம் - வைரலாகும் காணொளி
நாகப்பாம்பு ஒன்று தன் வாயில் ஒரு எலியைப் பிடித்துகொண்டு சூடான சாலையை கடக்க முற்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சாலையை கடக்க முயன்ற பாம்பு
தற்போது பாம்புகள் மக்கள் வாழ்விடத்தையும் நோக்கி வேகமாக வருகின்றது.
மீபத்தில், மகாராஷ்டிராவின் பால்கரில் ஒரு பாம்பு, சூரியனின் வெப்பம் காரணமாக சாலையைக் கூட கடக்க முடியாமல் தவிக்கிறது. இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பாம்பு எலியைத் தன் வாயில் கவ்விக்கொண்டது.
பின்னர் அது சாலையைக் கடக்க முயன்றது. ஆனால், வெயிலின் காரணமாகச் சாலை சூடாகிவிட்டது.
சுட்டெரிக்கும் அந்தச் சாலையில் பாம்பு அந்த பக்கம் சாலையை கடக்க முடியாமல் நிழலை நோக்கி ஓடி சென்று ஓய்வெடுக்கிறது. தற்போது இந்த காணொளி இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |