ஹோட்டல் கழிப்பறைக்குள் இராஜநாகம் - படு வைரலான திகிலூட்டும் காணொளி
பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கழிப்பறைக்குள் ஒரு ராஜநாகம் ஒளிந்திருந்த இருந்த காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரிசார்ட்டில் உள்ள ஒரு கழிப்பறையில் ஒரு ராகம் ஒளிந்திருந்தது.
விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்த நண்பர்கள் குழு, ஹோட்டல் கழிப்பறைக்குள் சென்றபோது அந்த பாம்பை கண்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் உள்ள வடக்கு நெக்ரோஸ் இயற்கை பூங்காவிற்குள் அமைந்துள்ள சால்வடார் பெனடிக்டோவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஐந்து நண்பர்கள் கொண்ட குழு ஒன்று அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது, அவர்களில் ஒருவர் குளியலறைக்குள் சென்றுள்ளார்.
அபபோது கழிவறைக்குள் ஏதோ அசாதாரணமாக இருப்பதைக் கவனித்துள்ளார்.

முதலில், தண்ணீரில் ஒரு கருமையான ஏதோ ஒன்றை கண்ட அந்த நபர் கழிப்பறை சரியாக ஃபிளஷ் செய்யப்படவில்லை என்று அதை மீண்டும் ஃபிளஷ் செய்தார்.
ஆனால் மீண்டும் ஃபிளஷ் செய்த பிறகு, கழிப்பறைக்குக் கீழே உள்ள குழாயிலிருந்து திடீரென ஒரு பாம்பின் தலை வெளியே வந்துள்ளது.
அங்கே இருந்த நபர் ஒருவர் கழிவறை மூடியை எச்சரிக்கையுடன் தூக்கி, பின்னர் ஒரு நீண்ட குச்சியால் அந்த பாம்பை மெதுவாக தள்ளி வெளியே எடுத்தார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
A hotel guest captured the terrifying moment a king cobra emerged from the toilet of a resort in Don Salvador Benedicto, Philippines. The guest called resort staff to help catch and remove the venomous snake. pic.twitter.com/dzoHNnHolB
— CBS News (@CBSNews) May 14, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |