பிரபல நடிகரால் துன்புறுத்தப்பட்ட நித்யா மேனன்... பரபரப்பு குற்றச்சாட்டு
படப்பிடிப்பில் பிரபல நடிகையான நித்யா மேனன் நடிகர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை நித்யா மேனன்
நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். பின்பு பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
கடந்த ஆண்டு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில், இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் இவர் நடித்த தேன் மொழி கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசுகையில், தெலுங்கு திரையுலகில் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாத நான், தமிழ் திரையுலகில் அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் நடிகர் ஒருவர் தன்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார் என்று பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |