பொறுப்பில்லா உனக்கு பொம்பள சோக்கு எதுக்கு? இன்ஸ்டாகிராமில் விளாசும் பாக்கியலட்சுமி குட்டி பொண்ணு!
பாக்கியலட்சுமியில் பாக்கியாவின் மகளாக மக்களை கவர்ந்த இனியா சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
வைரலாகும் காட்சி
இந்த நிலையில் சீரியல் சின்ன பொண்ணாக ரசிகர்கள் மனதை கவர்ந்த இனியா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் வீட்டிலிருந்தப்படி ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
அதில், “பொறுப்பில்லா உனக்கு பொம்பள சோக்கு எதுக்கு? ” என வசனத்தை அழுத்தமாக கூறியுள்ளார்.
காணொளியை பார்த்த இணையவாசிகள், “ சின்ன பொண்ணாக இருந்தவரா இவர்?” என ஷாக்கில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |