"இந்திய இசை உலகிற்கு பேரிழப்பு" - எஸ். ஜானகிக்கு முதல்வர் விஜய் உருக்கமான அஞ்சலி
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி, ஜூலை 11 அன்று மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் இரங்கல்
அதில், "இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்திய அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். எஸ். ஜானகி அவர்களின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 11, 2026
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை…
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |