விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து : சென்னையில் 1,562 சிலைகளுக்கு அனுமதி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய் வாழ்த்து
விழாவையொட்டி முதலமைச்சர் விஜய், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் வெற்றியடையவும், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

விழாவையொட்டி சென்னையில் 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் என மொத்தம் 18,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தவும், தலா இரண்டு தன்னார்வலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிபாடு முடிந்த பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி சிலைகள் வைப்பவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |