சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள்
லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற நிலையில், அந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நேரில் கண்டுகளித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லண்டனில் விஜய் த்ரிஷா
தமிழக முதல்வர் விஜய், ஆறு நாள் அரசியல் பயணமாக லண்டன் சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே, லண்டனின் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றார்.
பந்தய நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்யை அஜித்குமார் அன்புடன் கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், அஜித்தின் கார் அருகில் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அத்துடன், சில்வர்ஸ்டோன் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகருக்கான மாதிரியாக பார்வையிடும் நிகழ்விலும் முதல்வர் விஜய் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை காண நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வருகை தந்தார்.

மேலும் ஏற்கனசே விஜய் - த்ரிஷா உறவு குறித்த சர்ச்சைகள் இணையத்தில் நிலவிவரும் நிலையில், போட்டியை முதல்வர் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா கண்டுகளித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |