viral photos: விஜய் கொடி ஏற்றிய முதல் சுதந்திர தின விழா : முதல் வரிசையில் திரிஷா!
independence day viral phtos: இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.

முதல்வராக விஜயின் முதல் சுதந்திர தின விழா
தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் புனித ஜோர்ஜ் கோட்டைக்கு வருகை தந்தார். அங்கு அவரை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வரவேற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்டிருந்த உயர் அதிகாரிகளையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். முப்படையினர், சிறப்பு பொலிஸ் படையினர் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவுகள் அணிவகுத்து முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தின.

பின்னர், திறந்தவெளி வாகனத்தில் சென்று அணிவகுப்பில் பங்கேற்றிருந்த பொலிஸ் மற்றும் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து புனித ஜோர்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி பட்டொளி வீச, அங்கு திரண்டிருந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.

கவனம் ஈர்த்த த்ரிஷா
இதனையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிலையில், சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தத புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

மேலும், முதலமைச்சர் விஜயின் பெற்றோரும் அவருடன் அமர்ந்திருந்துக்கும் த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருவதுடன் இணையத்தில் புதிய சர்ச்சையையும் கிளப்பி வருகின்றது.
விஜய்யின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்ற போதிலும், அவரது குழந்தைகள் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஆகியோர் இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |