இன்ஸ்டாகிராமில் ராகுல்காந்தியை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்
இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்களது திறமைகளை வெளிப்படுத்த பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருவதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வருமானமும் அதிகரித்து வருகிறது.
அதேபோல், இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையும் அதிக அளவில் பின்தொடர்கின்றனர்.
உலக அளவில் பிரதமர் மோடியை இன்ஸ்டாகிராமில் 10.2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். மத்திய அமைச்சர் அமித் ஷாவை 3.22 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
மஜ்லீஸ் தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தியை தலா 40 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேர் பின்தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஸ்டாகிராம் தற்போது அரசியல் பிரசாரத்திற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.