சீஸரின் எகிப்து வருகையால் குலை நடுங்கிப்போன கிளியோபாட்ராவின் கணவன்: சாதனை சாம்ராஜியத்தின் அடுத்த கதை!
கிளியோபாட்ரா என்ற பெயரைக் கேட்டாலே நினைவிற்கு வருவது பேரழகி தான். அழகே பொறாமைப்படும் பேரழகியாக திகழ்ந்தவர்தான் இந்த கிளியோபாட்ரா.
ஆணாதிக்க ஆட்சியை கவிழ்த்து தன் அறிவால் மொத்த சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டு சரித்திரத்தில் இடம் பிடித்த மங்கை. உலகில் மிகவும் பழமையான நகரங்களில் எகிப்தும் ஒன்றாகும்.
எகிப்தின் ராணியாக இருந்தாலும் உலகம் முழுவதும் தனது அழகிய அடையாளங்களை பதித்து வைத்து விட்டு சென்றிருக்கிறார். பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் பலவகைத் திறமைகளுடனும், சாதூரியத்துடனும் திறம்படச் செயல்பட்டவள் கிளியோபாட்ரா.
ஆரம்பம்
19-வது வயதில் ரோமானியப் படையில் வீரராக சேர்ந்தார். மிதிலின் என்ற இடத்தைக் கைப்பற்ற நடந்த போரில் கப்பல்படையில் சிறப்பாகச் செயலாற்றிய ஜூலியஸ் சீஸர், அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.
பின்னர் ரோம் திரும்பிய சீஸர், அரசியலில் தீவிரமாக இறங்கினார். குழந்தை எதுவும் பிறக்காத நிலையில் கி.மு.69ல் சீஸரின் மனைவி கொர்னெலியா இறந்துபோனாள் (இதே ஆண்டில்தான் எகிப்தில் பேரழகி கிளியோபாட்ரா பிறந்தாள்).
பேரழகி கிளியோபாட்ராவின் பிறப்பு எப்படிப்பட்டது என்பது பற்றியும் அவரது சாதனைப் பற்றியும் அறிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்