Tongue: பற்களை சுத்தம் செய்வதோடு நாக்கை சுத்தம் செய்வது ஏன் அவசியம் ?
நாக்கின் செயல்பாடு சுவையை உணர்வது மட்டுமல்ல, அது எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் வெளிப்படுத்துகிறது.
உடலிலே அதிக அளவு பாக்டீரியாக்கள் வாயில் தான் காணப்படுகின்றன.பல உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க நாக்கைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் முதலில் அறிகுறி தென்படுவது நமது நாக்கில் தான்.
நாக்கின் நிறத்தை வைத்தே நாம் எந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று மருத்துவரால் கூற முடியும். அந்த வகையில் நாக்கை எப்போதும் சுத்தம் செய்வது முக்கியதாகும். எனவே இது பற்றிய முழு தகவலை இங்கு பார்க்கலாம்.
நாக்கை சுத்தம் செய்வது ஏன் அவசியம்
வாய்வழி சுகாதாரத்திற்கு உங்கள் நாக்கை சுத்தம் செய்வது அவசியம். பல் சொத்தை மற்றும் ஈறு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நாக்கில் வாழ்கின்றன.
எனவே நாக்கை தினமும் சுத்தம் செய்யும் போது அது பாக்டீரியாக்களை நீக்கி பல் சொத்தை மற்றும் ஈறு நோயைக் குறைக்கிறது. பற்சிதைவு மற்றும் ஈறு நோயால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தவிர்க்க நாக்கை சுத்தம் செய்வது அவசியம்.
சுத்தம் செய்யாவிட்டால் ஏற்படும் நோய்
அழுக்கு நாக்கு வயிற்று உபாதை பிரச்சனையை ஏற்படுத்தும். உங்கள் நாக்கு கருப்பாகவும், அதில் வெள்ளை நிற கொப்புளங்கள் இருந்தால், அது உங்கள் செரிமான அமைப்பு மோசமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.
உங்கள் நாக்கு மிகவும் மென்மையாக இருந்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது மற்றும் நீங்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படலாம். சில நேரங்களில், இந்த அறிகுறிகள் வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை ஏராளமாக உட்கொள்வது முக்கியம். சில சமயங்களில், சிலரின் நாக்கில் விரிசல்கள் இருக்கும்.
சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்பாடற்றதாக மாறும்போது இது நிகழ்கிறது. இந்தப் பிரச்சனையைப் புறக்கணித்தால் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே நாக்கின் நிலையில் மாற்றம் தெரிந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |