காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்பவரா? எவ்வளவு பேராபத்து ஏற்படும் தெரியுமா? எச்சரிக்கை
பலரும் பட்ஸை கொண்டு தங்கள் காதுகளை சுத்தம் செய்வார்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏதாவது கூர்மையான பொருளை வைத்துக் காதைக் குடைவதால், காதிலிருந்து அழுக்கு வெளியேறுவதற்கு பதிலாக அதிகமாக உள்ளேதான் செல்கிறது. அப்போது செவிப்பறை பாதிக்கப்படும்.
தவறுதலாகச் செவிப்பறையில் அந்தப் பொருள்பட்டு கிழித்துவிட்டால், காதுவலி, காதில் புண், காது கேட்காமல் போவது, காதினுள் வீக்கம் ஏற்பட்டு வாயை அசைக்க முடியாமல் போகும் ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன. காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது ஏன்? காதில் பட்ஸ் பயன்படுத்தும் போது அது காதினுள் சிக்கி கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதோடு பட்ஸில் உள்ள காட்டன், ஒரு பிளாஸ்டிக் குச்சியின் இரு முனையிலும் வைக்கப்பட்டுள்ளதால் அது காதினுள் செல்வதற்கும் கூட அதிக வாய்ப்புள்ளது. மேலும் பருத்தியாலான பட்ஸின் பஞ்சுகள் காதுக்குள் அலர்ஜியையும் ஏற்படுத்தும். இதனால்தான் பட்ஸ் வைத்து காது குடைவதை முற்றிலும் தவிர்க்கச் சொல்கிறோம். காதைச் சுத்தம் செய்யவே தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, பட்ஸால் சுத்தம் செய்வது கூடவே கூடாது.