வயிற்றை சுத்தப்படுத்தி குளிர்ச்சியாக்கும் பச்சடி - இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க
வயிற்றை குளிச்சியாக்கி குடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பச்சடி ஒன்றின் ரெசிபியை பதிவில் பார்க்கலாம்.
வாழைத்தண்டு பச்சடி
நாம் காலையில் டீயில் தொடங்கி நள்ளிரவு வரை வாய் வழியாக வயிற்றுக்கு உணவு அனுப்பி கொண்டே இருப்போம். சிலவை ஆரோக்கியமாக இருக்கலாம்.
சிலவை ஆரோக்கியமற்றதாகவும் இருக்கலாம். எனவே நம் வயிற்றை சுத்தமாக்குவது நல்லது. அப்போது தான் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் வராது.
அந்த வகையில் உடலின் உட்புற பாகங்களை சுத்தமாக்க உணவினால் மட்டுமே முடியும். அப்படி ஒரு உணவு தான் வாழைத்தண்டு பச்சடி. இது செய்வதற்கும் இலகு. சாப்பிடவும் பிரமாதமாக இருக்கும்.

தேவையானவை
- தயிர்,
- வாழைத்தண்டு,
- மாங்காய்,
- இஞ்சி,
- வெள்ளரிக்காய்,
- உப்பு ,
- கொத்தமல்லி

செய்யும் முறை
முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும். பின்னர் மாங்காய் வெள்ளரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இஞ்சியை துருவி எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு கிண்ணத்தில் தயிர், வேக வைத்த தண்டு, மாங்காய், வெள்ளரிக்காய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இறுதியாக கொத்தமல்லி தூவவும். அவள்ளவு தான் பச்சடி தயார்.

வாழைத்தண்டு நன்மைகள்
வாழைத்தண்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது, சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.
- நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது.
- வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
- நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
- வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.
- சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.
- மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |