கணவர் கன்னத்தில் அறைந்து வீடியோவை வெளியிட்ட நடிகை.. எழும் கடும் விமர்சனங்கள்!
தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. இவர் விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இதையடுத்து, தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அனிதா இன்ஸ்டாகிராம் பதிவில் அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்’ என்று கூறி தனது கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருக்கிறார்.
மேலும், தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்க்கவும் என அந்த பதிவில் அனிதா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ கடும் விமர்சனத்திற்குயுள்ளாகியுள்ளது.