நம்ம சோனியா அகர்வாலா இது? எடை குறைச்சு அடையாளம் தெரியாமல் மாறிப் போன புகைப்படங்கள்
நடிகை சோனியா அகர்வால் தற்போது இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவிற்கு செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.
இவர் இயக்கத்தில் 'காதல் கொண்டேன்', 'கோயில்', '7 ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' 'வானம்' மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
மற்ற நடிகைகளை விட குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், நடித்த படங்கள் பெரும்பாலும் சூப் ஹிட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைக்கவில்லை.
அந்த வகையில் சோனியா அகர்வால் - செல்வராகவன் விவாகரத்து செய்து கொண்டனர்.
வைரல் புகைப்படங்கள்
இந்த நிலையில் விவாகரத்திற்கு பின்னர் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது சில படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனியா அகர்வால் எடை குறைத்து சிலிம்மாக மாறிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்க்கும் போது “ இது சோனியா அகர்வாலா?” என திகைக்க வைக்கின்றது.
அந்தளவு அடையாளம் தெரியாமல் மாறி விட்டார். சினிமாவிற்குள் வந்த போது எப்படி இருந்தாரோ அது போன்ற தற்போது இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |