48 வயதில் நக்மாவிற்கு வந்த திருமண ஆசை! மீடியாக்களுக்கு முன் கொடுத்த ஓபன் டாக்
48 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய நடிகை நக்மா திட்டம் போடுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நக்மா
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நக்மா தான்.
இவர் 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் “பாட்ஷா“ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்ட நக்மா, நிறைய படங்களில் கமிட்டாகியிருந்தார்.
பின்னர் புதிய புதிய நடிகைகள் வரவர நக்மாவின் மார்கட் குறைய ஆரம்பித்து விட்டது.
விரைவில் திருமணம்..
இந்த நிலையில் 48 வயதாகும் நக்மாவிற்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆசை வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
திருமணம் குறித்து பேசிய நக்மா, “ எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என நினைக்கிறேன். திருமணம் எப்போது நடக்கும் என தெரியாது. ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என ஆசையாக இருக்கின்றது. திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்.“ என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ நக்மாவிற்கு கூடிய விரைவில் நல்ல ஒருவர் துணையாக வர வாழ்த்துகிறோம்.. “ என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |