48 வயதில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட திருமண ஆசை... உண்மையை உடைத்த நக்மா
ஜோதிகாவின் அக்காவும், நடிகையுமான நக்மா 48 வயதில் தனது திருமண ஆசையைக் குறித்து பேசியுள்ளார்.
நடிகை நக்மா
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக 1994ம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தான் நடிகை நக்மா.
தமிழில் ரஜினிகாந்த் உடன் நடித்த பாட்ஷா படம் இவருக்கு பெரும் வரவேற்பினை கொடுத்தது. பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகையானார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, போஜ்புரி மொழியிலும் அறிமுகமாகி நடிப்பில் அசத்தினார். பின்பு 2008ம் ஆண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
இவருக்கு ஜோதிகா, ரோஷினி என்று இரண்து தங்கைகள் உள்ளனர். தற்போது 48 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவர் பல நடிகர்களுடன் காதல் என்று கிசுகிச்சக்கப்பட்டார். திருமணம் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இவர் கூறுகையில், “எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை. வேறு வார்த்தைகளில் கூறு வேண்டுமென்றால் எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன்.
திருமணம் விரைவில் நடக்குமா என்று பார்ப்போம். மேலும் திருமணம் செய்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மகிழ்ச்சி என்பது வாழ்வில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் அல்ல என்று உணர்வு பூர்வமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |