தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி....ரிச் ஓட்டலையும் மிஞ்சிய சுவை!
நம் வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் சட்னி என்றால் அது தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி தான்.
அதை தவிர்த்து கார சட்னி,புதினா சட்ட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே உடலுக்கு நல்லது தான்.
இதுவரை தேங்காய் சட்னியை தனியாக அரைத்து இருப்போம், அதே போல தான் வேர்க்கடலை சட்னியும்.
மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க! பாரிய பக்கவிளைவு ஏற்படுமாம்
ஆனால் இந்த பதிவில் வேர்க்கடலை, தேங்காய், பொட்டுக்கடலை என மூன்றும் சேர்த்து அரைக்கும் சட்னியை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்
- பொட்டுக்கடலை
- வேர்க்கடலை
- பச்சை மிளாய்
- வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- கடுகு
- எண்ணெய்
- புளி, உப்பு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்பு அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இறுதியாக அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் போதும் சூப்பரான டேஸ்டியான தேங்காய் - வேர்க்கடலை சட்னி தயார்.