கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ரோஸ் மில்க் கேக் ஈஸியா செய்வது எப்படி? செய்து பாருங்க
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வீட்டில் கேக் செய்து உறவினருடன் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம்.
பண்டிகை தினத்தில் பொதுவா ப்ளம் கேக் தான் அதிகமாக செய்வார்கள். ஆனால் இந்த வரும் ஸ்பெஷலாக கேக் செய்ய நினைத்தால், ரோஸ் மில்க் கேக் செய்யலாம்.
இப்படி நினைப்பவர்கள் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரோஸ் மில்க் கேக்கை எப்படி செய்வதென்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* காய்ச்சி ஆற வைத்த பால் - 3/4 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* ரிபைன்டு எண்ணெய் - 1/2 கப்
* ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் ஃபுட் கலர் - சிறிது
* மைதா - 2 கப்
* பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* பால் - 1 கப்
* கன்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
* விப்டு க்ரீம் - 200 மிலி
* ஐசிங் சுகர் - 1/2 கப்
கேக் செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, அதனுடன் சர்க்கரை, தயிர், ரிபைன்டு எண்ணெய், ரோஸ் சிரப் மற்றும் ரோஸ் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு அகலமான பௌலின் மேல் மாவு சலிக்கும் சல்லடையை வைத்து, அதில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகிய மூன்றையும் ஒன்றாக போட்டு சலித்து எடுக்கவும்.
சலித்த மாவை, மற்றொரு பௌலில் உள்ள ரோஸ் பாலுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து விடவும். கலந்த பின் கேக் தட்டையை எடுத்து, அதில் பட்டர் பேப்பரை வைத்து, வெண்ணெய் தடவவும்.
எல்லாம் செய்த பின்னர் கடைசியாக கேக் கலவையை வட்டமாக சுற்றி விட்டு, ஒருமுறை தரையில் தட்டிக் கொள்ள வேண்டும். ஓவனில் கேக் கலவையை வைத்து சரியாக 180 டிகிரி C-யில் 15 நிமிடம் வரை சூடாக்கவும். சிறிது நேரம் கழித்து ஓவனை 180 டிகிரி C-யில் வைத்து உள்ளே கேக் தட்டை வைத்து, 30 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
கேக் தயாரான உடன் வெளியே எடுத்து குளிர வைத்து அதில் மேல் இருக்கும் பட்டர் பேப்பரை அகற்றி விட வேண்டும். இதெல்லாம் முடிந்தவுடன் கேக்கை சமமான அளவு வெட்டி எடுக்கவும்.
இன்னொரு பக்கம் ஒரு பௌலில் பால், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வெட்டி தயாராக இருக்கும் கேக் மீது ரோஸ் மில்க்கை ஊற்றி, ஃப்ரிட்ஜ்ஜில் 30 நிமிடம் வைக்கவும்.
அதற்குள் ஒரு பௌலில் விப்டு கிரீம்மை எடுத்து அதை ஒரு 2 நிமிடம் பிளெண்டரில் அடித்து கொள்ளவும்.
பின்னர் அதில் ஐசிங் சுகரை சேர்த்து 15 நிமிடம் நன்கு அடித்துக் கொண்டால், க்ரீம் தயார். இறுதியாக ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள கேக்கை எடுத்து அதன் மேல் அடித்து வைத்துள்ள க்ரீம்மை சரிசமமாக பரப்பி, பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி, சிறிது ரோஜாப்பூ இதழ்களையும் தூவி அலங்கரித்தால் சுவையான “ரோஸ் மில்க் கேக்” தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |