வெறும் வயிற்றில் கொய்யா இலை சாற்று குடித்தால் “இந்த” நோய் வராதாம்- செய்து பாருங்க
ஆப்பிளுக்கு இணையான சத்தைக் கொண்ட பழமாக கொய்யாப்பழம் பார்க்கப்படுகின்றது.
இந்த பழம் விலைக் குறைவில் சந்தையில் கிடைக்கும் சுவையான பழமாகவும் உள்ளது. இவ்வாறு கிடைக்கும் கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
அத்துடன் கொய்யா இலை சாற்றை குடிப்பதாலும் ஏகப்பட்ட பலன்கள் உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். கொய்யா இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ளன.
மேலும் இந்த இலைகளில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களும் உள்ளன. இவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
அந்த வகையில், கொய்யா இலை சாற்றை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது எண்ணற்றல் மாற்றங்களை உடலில் காணலாம். அப்படியான மாற்றங்கள் தொடர்பிலான விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொய்யா இலை சாற்றை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. கொய்யா இலை சாறு குடிப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொய்யா இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவி செய்து அடிக்கடி நோய் ஏற்படுவதையும் கட்டுபடுத்தும்.
2. காலை வெறும் வயிற்றில் கொய்யா இலை சாற்றை குடிப்பதால் செரிமான பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். அத்துடன் இவை குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி செரிமானத்தை சீர்ப்படுத்தும்.
3. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு கொய்யா இலை சாறு சிறந்த தீர்வாக இருக்கும். உடலில் உள்ள மெட்டபாலிச விகிதத்தை சீராக்கி கொழுப்புக்களை கரைக்கிறது. அத்துடன் கொய்யா இலைகளில் இருக்கும் கலோரிகளை கட்டுக்குள் வைக்கிறது.
4. கொய்யா இலைகளின் சாறு வெறும் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் வெளியில் தெரியும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து, சருமத்தை அழகாக்கிறது. முகப்பரு பிரச்சினையுள்ளவர்கள் இந்த சாற்றை தினமும் குடிக்கலாம்.
5. இரத்த சர்க்கரை அளவில் பிரச்சினையுள்ளவர்கள் கொய்யா இலை சாற்றை தினமும் குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது. எனவே தினமும் காலையில் கொய்யா இலை சாற்றை குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |