பிரபல கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம்... கால்கள் செயலிழப்பு! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கேர்ன்ஸ் இதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில், தற்போது கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூசிலாந்தின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார்.
2010-ல் திருமணம் ஆன பிறகு ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பராவில் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக வாழ்ந்துள்ளார். கேன்பராவில் கிறிஸ் கேர்ன்ஸுக்குச் சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இந்த நிலையில், கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அறுவைச் சிகிச்சையின்போது கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டன.
முதுகுத்தண்டில் ஸ்டிரோக் ஏற்பட்டதால் அவருடைய கால்கள் செயலிழந்து விட்டன.
தற்போது கேன்பராவில் உள்ள மருத்துவமனையில் கேர்ன்ஸுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது என கேர்ன்ஸின் வழக்கறிஞர் ஆரோன் லாயிட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.