12 ஆண்டுகளின் பின் கடகத்தில் குரு : இந்த 3 ராசிகளின் அதிர்ஷட கதவு திறக்கப்போகுது!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயரச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது. காரணம் நவகிரங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்ததக்க சாதக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், ஜோதிடத்தில் ராஜ குருவாக கருதப்படும் குரு பகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது.

தற்போது குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது உச்ச ராசியில் பிரவேசிக்கப் போகிறார். ஜூன் 02, 2026 அன்று காலை 6:30 மணிக்கு குருபகவான் தனது உக்கார ராசியான கடக ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.
அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளவில் சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

குருவின் பெயர்ச்சியானது மேஷ ராசியின் நான்காம் வீட்டில் நிகழவுள்ளதால், இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.
புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்ககொடுக்கும்.
குறிப்பாக நிதி நிலையில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வீட்டில் பொன் பொருள் குவிய ஆரம்பிக்கும். தொழில் விடயத்தில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்

குரு பகவான் கடக ராசியின் முதல் வீட்டில், அதாவது அவர்களின் லக்னத்தில் பெயர்ச்சி அடையவிருப்பதால், இந்த ராசியினரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோக வெற்றி உண்டாகும்.
வியாபாரிகளுக்கு குருவின் ஆசியால் தங்களின் தொழிலை விரிவுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இவர்களின் பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும்.
கடக ராசியில் நிகழும் குருபெயர்ச்சியானது இவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுக்கப்போகின்றது. புதிய சொத்து வாங்கும் யோகம் கணப்படுபகின்றது.
கன்னி

கன்னி ராசியின் பதினொன்றாம் வீட்டிற்குப் பெயர்ச்சி நிகழவுள்ளதால், இவர்களின் திருமண வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி பல்வேறு வழிகளிலும் நல்ல திருப்பங்கள் உண்டாகப்போகின்றது.
பல வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கூடி வரும். இவர்களின் பொருளாதாரத்தில் குருவின் பார்வையால் அமோக வளர்ச்சி ஏற்படும்.
புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.. இவர்களின் நீண்ட கால திட்டங்கள் நிறைவேறுவதற்கான யோகம் கூடிவரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |