சூடான சாதத்திற்கு சௌ சௌ பொரிச்ச கூட்டு! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம்.
ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான சௌ சௌ பொரிச்ச கூட்டு செய்யலாம்.
அந்த வகையில் சூடான சாதத்திற்கு சௌ சௌ பொரிச்ச கூட்டு எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
* சௌ சொள - 1
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சௌ சௌ பொரிச்ச கூட்டு செய்முறை
முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கி அதனை துண்டங்களாக வெட்டி கொள்ளவும். பின்னர் பாசிப்பயற்றை கழுவி அதில் மஞ்சள் பொடி சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இறக்கவும்.
பாசிப்பயறு வெந்ததும் சௌ சௌ காயை சேர்த்து தேவையானளவு உப்பு சேர்க்கவும்.
இதனை தொடர்ந்து கழுவிய மிக்ஸி சாரில் துருவிய தேங்காய், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
காயுடன் அரைத்த தேங்காய் கலவையை கொட்டி மீண்டும் குக்கரை முடி இரண்டு விசிலுக்கு விடவும்.
கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலை பருப்பு சேர்த்து தாளித்து, கூட்டுக்கு மேல் கொட்டி கிளறினால் சுவையான சௌ சௌ பொரிச்ச கூட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |