தேனுடன் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிடலாமா?
பொதுவாக வீடுகளில் தினமும் மதிய நேர சாப்பாட்டிற்கு பின்னர் பழங்கள் எடுத்து கொள்வார்கள்.
அந்த வகையில் வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள், தோடம்பழம் ஆகிய பழங்கள் தான் அதிகமாக சாப்பிடுவார்கள்.
இவற்றையும் தாண்டி பழங்களில் மிகச் சிறிய அளவில் இருக்கும் நெல்லிக்காய் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?
மேற்குறிப்பிட்ட பழங்களை விட நெல்லிக்காய் அதிகமான சத்துக்கள் நிறைந்தது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அப்படி என்ன தான் நெல்லிக்காயில் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
நெல்லிக்காயில் இருக்கும் நன்மைகள்
1. நெல்லிக்காய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
2. ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. நெல்லிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
4. முடிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. பொடுகு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
5. நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து, உடலில் பூசி குளித்தால், சருமம் இயற்கை அழகுடன் மிளிரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |