பிக்பாஸ் 7 போட்டியாளராக களமிறங்க போகும் நடன இயக்குநர்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 7ற்கு புதிய போட்டியாளராக நடன இயக்குநர் சிறீதர் களமிறங்க போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றிக்கரமாக முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாகவுள்ளது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் துவங்கப்பட்ட காலங்களில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமாவதற்கு முக்கிய காரணம் கமல் அவர்கள் என்று கூட கூறலாம்.
புதிய போட்டியாளர்
இதன்படி, இந்த முறை கமல் அவர்களுக்கு அதிகமான பட ஷீட்டிங் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் தள்ளிப் போய் கொண்டே செல்கிறது.
இந்த முறை பிக்பாஸ் 7 பல சினிமா பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதால் பிக்பாஸ் சீசன் 6 ஐ விட நல்ல வரவேற்பை பெறும் என தொலைக்காட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சீசனில் நடன இயக்குநராக சிறிதர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் ரொபர்ட் மாஸ்டர் விட்டதை இந்த தடவை சிறிதர் அவர்கள் பிடிப்பார் என நெட்டிசன்கள் முனுமுனுத்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |