முகத்தை அழகாக காட்ட கண்ணாடியை எவ்வாறு தெரிவு செய்வது?
கண் கண்ணாடி நாம் அணியும் போது எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கண் கண்ணாடி
இன்றைய காலத்தில் கண் பார்வை குறைபாடு என்பது அதிகமான நபர்களுக்கு காணப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்வை குறைபாடு காணப்படுகின்றது.
இதற்காக கண்ணாடி அணிந்து கொள்வதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் நமது முகத்திற்கு ஏற்ற கண்ணாடிகளை தெரிவு செய்ய வேண்டும்.
சரியான கண்ணாடி அணிந்தால் மட்டுமே, முகம் அழகாக இருப்பதுடன், அசௌகரியம் இல்லாமல் இருக்கலாம். இதனை சில செயல்முறைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
முதலில், உங்கள் மூக்கின் அகலத்தைக் கணக்கிடவேண்டும். ஒரு ஏ.டி.எம். கார்டை மூக்கு மேல் வைக்கவும்.
கார்டு முழுமையாக கண்களுக்கு மறைந்தால் பெரிய அளவு (L), கார்டும் கண்களும் சமமாக இருந்தால் நடுத்தர அளவு (M), கார்டு கண்களுக்கு ஒப்பிட சிறியது என்றால் சிறிய அளவு (S) என்று வகைப்படுத்தலாம்.
முக வடிவத்துக்கு ஏற்ப கண்ணாடி வகைகள்
பரந்த நெற்றியுடன் கூடிய சதுர முகத்திற்கு வட்டமோ அல்லது 'டி' வடிவ கண்ணாடிகள் பொருத்தமாகும். ஏவியேட்டர் ஸ்டைல் கண்ணாடிகள் சதுர முகம் மென்மையாகக் காண்பிக்கும்.
பரந்த கன்ன எலும்புகளுடன் கூடிய வட்ட முகத்திற்கு வட்ட கண்ணாடிகள் பொருத்தமில்லை. நீளம் கொண்ட செவ்வக அல்லது ரெட்ரோ ஸ்டைல் கண்ணாடிகள் சிறந்தவை.
நீள்வட்ட முகத்துக்கு பெரிய சதுர அல்லது செவ்வக வடிவ கண்ணாடிகள் பொருத்தமாக இருக்கும். இவை முக அமைப்பை சிறப்பாக வெளிப்படுத்தும்.
இதய வடிவ முகத்துக்கு ஏவியேட்டர் வகை மற்றும் ரிம்லெஸ் (கம்பியற்ற) பிரேம்கள் பொருத்தமாகும். உலோக அல்லது பிளாஸ்டிக் மெல்லிய பிரேம்கள் முகத்தை அழகாக காட்டும்.
எந்தவொரு வகை பிரேமிலும், லென்ஸின் அடிப்பகுதி உங்கள் கண்களின் அளவுக்கு ஏற்ப பரபரப்பாக இருக்க வேண்டும். சரியான கண்ணாடி தேர்வால் தோற்றத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |