அதிக கொலஸ்ட்ரோலை குறைக்கும் சிறப்பான ஆயுர்வேத மூலிகைகள்
ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன.
அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன.
உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை HDL கொழுப்பு என்று கூறப்படுகின்றது. தேவைப்படாத கொழுப்புகளான LDL கொழுப்புகள் ரத்த குழாயில் படியும் செயற்பாடு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும்.
இந்த கெட்ட கொலஸ்ரோலை தடுக்க சிறப்பான ஆயுர்வேத மூலிகைகள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
கெட்ட கொலஸ்ரோல்
1. வெந்தயம் வீட்டில் நீங்கள் இலகுவாக எடுத்து கொள்ளலாம். அந்த வெந்தயத்தை இரவு படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை காலையில் அதன் தண்ணீரை மட்டும் குடித்து வர வேண்டும்.
வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல ஆரோக்கிய கூறுகள் உள்ளன.
2. நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளது. இந்த நெல்லிக்காயை ஒரு மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியே எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும்.
இதை தினமும் காலையில் வெறும்வயிற்றில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரோலை கட்டுக்குள் வைக்கலாம்.
3. பாலை கொஞ்சம் கொதிக்க விட்டு அதில் கெஞ்சம் அஸ்வகந்தா பொடியை போட்டு கலக்கி அதை ஒரு கிளாஸ் அளவில் குடித்து வந்தால் கொலட்ஸ்ரோல் கட்டுக்குள் இருக்கும்.
அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைத்து, உடலின் இரத்த நாளங்களைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
4.ஒரு நான்கு அல்லது மூன்று பல் பூண்டை தோல் உரித்து சிறிது சிறிதாக வெட்டி தண்ணீர் கொஞ்சமாக குடித்து மென்று சாப்பிட வேண்டும்.
அவ்வறு ஒவ்வொரு நாளும் செய்து வந்தால் கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்தலாம். பூண்டில் கொழுப்பைக் குறைக்க உதவும் அற்புதமான ஆயுர்வேத கலவை உள்ளது.
5. பலரும் அறிந்திராத திரிபல்லா பொடியை தினமும் உட்கொண்டு வந்தால் கொலட்ஸ்ரோல் கட்டுக்குள் வரும். உடலில் இருக்ககூடிய நச்சுக்களை அகற்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்க இது உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |